UNICEF OGIP ஆய்வுபற்றிய புள்ளிவிவரங்கள்
- பங்கேற்கும் நாடுகள்
- 21
- மொத்தம் பதிலளித்தவர்கள்
- 22,043
UNICEF மைக்ரோசைட் மற்றும் அறிக்கை
குழந்தைப்பருவத்தை மாற்றும் திட்டம்பற்றி
ஊக்குவிப்பு
நாம் விரைவான மற்றும் தொலைநோக்கு மாற்றத்தின் சகாப்தத்தில் வாழ்கிறோம். டிஜிட்டல் மயமாகி, உலகமயமாகி, மேலும் பலதரப்பட்டதாக - உலகம் மாறிவிட்டதால் - குழந்தைப்பருவமும் அதனுடன் மாறுகிறது. UNICEF மற்றும் Gallup ஒருங்கிணைந்த - குழந்தைப்பருவத்தை மாற்றும் திட்டம் - இந்த மாற்றங்களை ஆய்வு செய்யவும், 21 ஆம் நூற்றாண்டில் குழந்தையாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை நன்கு புரிந்து கொள்வதற்கும் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் இரண்டு கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுகிறது: இன்று வளர்ந்து வருவது எப்படி இருக்கிறது? மேலும் இளைஞர்கள் உலகைப் எப்படி வித்தியாசமாகப் பார்க்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, நாங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடமிருந்து கேட்க விரும்பினோம். இளைஞர்கள் மற்றும் வயதானவர்களின் அனுபவங்களையும் கண்ணோட்டங்களையும் ஒப்பிடுதல் குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது, தலைமுறைகள் எங்கு வேறுபடுகின்றன அல்லது ஒன்றிணைகின்றன என்பதை ஆய்வு செய்யச் சக்திவாய்ந்த லென்ஸை வழங்குகிறது. இன்று மற்றும் எதிர்காலத்தில் அனைத்து குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணியில் இளைஞர்களை - அவர்களின் அனுபவங்கள் மற்றும் கண்ணோட்டங்களை – மையப்படுத்துவதே திட்டத்தின் இறுதி நோக்கம்.
ஆய்வு
திட்டத்தின் கேள்விகள் மற்றும் கருத்துக்களை ஆய்வு செய்ய, UNICEF மற்றும் Gallup ரகரகரக பீஸ்போக் ஆய்வை வடிவமைத்துள்ளன, இது உலகம் முழுவதும் 21 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உலக வாக்கெடுப்பை மேற்கொள்வதிலிருந்து கிடைத்த அதனுடைய நிபுணத்துவத்தில், Gallup ஒவ்வொரு நாட்டிலும் (இந்தியாவில் 1,500) குறைந்தபட்சம் 1,000 நபர்களின் பிரதிநிதி மாதிரிகளை ஆய்வு செய்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், மாதிரிகள் இரண்டு வயதுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டது: 15 முதல் 24 வயதுடையவர்கள் (ஐக்கிய நாடுகளின் இளைஞர்களின் வரையறையுடன் சீரமைக்கப்பட்டது), மற்றும் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். ஜனவரி மற்றும் ஜூன் 2021-க்கு இடையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. பதிலளித்தவர்கள் அனைவரும் தொலைபேசிமூலம் தொடர்பு கொள்ளப்பட்டார்கள். பல நிபுணர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட, ஆய்வு ஆவணத்தில் பிற கருத்துக் கணிப்புகளில் சோதிக்கப்பட்ட கேள்விகளும், குழந்தைப்பருவத்தை மாற்றும் திட்டத்திற்காகக் குறிப்பாக உருவாக்கப்பட்ட புதிய கேள்விகளுக்கு அடங்கும். முறைப் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம்.
மைக்ரோசைட்
இந்த மைக்ரோசைட் UNICEF ஆல் உலகம் முழுவதும் குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைத் திட்டத்தின் கேள்விகளில் ஈடுபடுத்தி அதன் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டது. நீங்கள் இதை அனுபவிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்! மைக்ரோசைட் CLEVER°FRANKE என்ற வடிவமைப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. மைக்ரோசைட் மூலம் பயனர்கள்பற்றிய தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படவில்லை.
முடிவுகள்
மைக்ரோசைட்டில் வழங்கப்பட்ட முடிவுகள் நேரடியாக ஆய்வு தகவல்களிலிருந்து எடுக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்லது சராசரிக்கான அனைத்து குறிப்புகளும் - எ.கா., “சராசரியாக” அல்லது “இதன் சராசரி” - என்பது முழுமையாக ஆய்வு நடத்தப்பட்ட 21 நாடுகளில் இடைநிலை நாட்டிற்கு கொடுக்கப்பட்ட கேள்விக்கான ஆய்வு முடிவுகளைக் குறிக்கிறது. இதேபோல், கொடுக்கப்பட்ட நாட்டின் வருமானக் குழுவிற்கான "சராசரி" என்பது அந்த நாடுகளின் குழுவில் உள்ள இடைநிலை நாட்டின் ஆய்வு முடிவுகளிலிருந்து பெறப்பட்டது. நாட்டின் மாதிரிகளின் அளவு, மற்றும் மற்றும் மாதிரியை இரண்டு வயதுக் குழுக்களாகப் பிரிப்பதுடன், மைக்ரோசைட்டில் வழங்கப்பட்டுள்ள பெரும்பாலான முடிவுகள் 95% நம்பிக்கை அளவில் தோராயமாக +/- 4 சதவீதப் புள்ளிகளின் பிழையுடன் உள்ளன. மக்கள்தொகையில் இருக்கும் சிறிய துணைக்குழுக்களுக்கு பிழை அளவு பெரிதாக இருக்கும். முடிவுகளைப் எப்படி விளக்குவது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே வழிமுறைப் பக்கத்தில் காணலாம்.
மேலும் அறிந்து கொள்ளவும்
திட்டத்தின் கண்டுபிடிப்புகள்பற்றிய முழுமையான ஆய்வைத் திட்டத்தின் அறிக்கையில் காணலாம், இது ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் அரபு மொழிகளில் கிடைக்கிறது. மேலும் ஆய்வு செய்ய விரும்பும் பயனர்கள் இந்தப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள கேள்வித்தாள், வழிமுறை, முழு மைக்ரோடேட்டா மற்றும் விதிகள் புத்தகத்தை மதிப்பாய்வு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். உங்கள் சொந்த பகுப்பாய்விலிருந்து நீங்கள் கண்டறிவதை நாங்கள் கேட்க விரும்புகிறோம்! உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், அல்லது நீங்கள் திட்டத்தைப் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை எங்களிடம் தெரிவிக்க விரும்பினால், தயவுசெய்து எங்களுக்கு Changing-Childhood@unicef.orgஇல் மின்னஞ்சல் அனுப்பவும்.
முன்னுரைக்கு திரும்பவும்