UNICEF | for every childUNICEF | for every child

நம்பிக்கை

எதிர்கால அதிர்ஷ்டம்

காலப்போக்கில் உலகம் மேம்பட்டு வருவதாகப் பெரும்பாலான இளைஞர்கள் உணர்கிறார்கள். அவர்களின் தலைமுறை வயதுவந்த நிலைக்குத் தயாராகும்போது அவர்களின் சொந்த நாட்டில் பொருளாதார வாய்ப்புகளை அவர்கள் எப்படி மதிப்பிடுகிறார்கள்?

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக நாங்கள் 21 நாடுகள் முழுவதும் 15–24 மற்றும் 40+ வயதுடையவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தினோம்.

ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்
நாங்கள் இளைஞர்களிடம் அவர்களின் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு வயதாகும்போது அவர்களின் பெற்றோர்களைவிடப் பொருளாதாரத்தில் சிறப்பாக இருப்பார்கள் அல்லது மோசமாக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டோம்.

என்ன பங்கு அவர்களுக்குச் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்
அவர்களின் நாட்டில் உள்ள குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களைவிடப் பொருளாதாரத்தில் சிறப்பாக இருப்பார்கள் என்று % பேர் நினைக்கிறார்கள்
54%
சிறந்த
சராசரியாக, இளைஞர்களில் 54% அவர்களின் நாட்டில் உள்ள குழந்தைகள் வளரும்போது அவர்களின் பெற்றோரைவிட பொருளாதாரத்தில் சிறந்த நிலையில் இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.
குழந்தைகள் அவர்களின் பெற்றோரைவிட மோசமாக இருப்பார்கள் என்று 38% பதிலளித்துள்ளார்.
மீண்டும், வயதான தலைமுறையைவிட இளைஞர்கள் மிகவும் சாதகமாக இருக்கிறார்கள்.
சராசரியாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், இன்றைய குழந்தைகள் அவர்களின் பெற்றோரைவிட பொருளாதாரத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கூறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இளைஞர்களிடமிருந்து வரும் உற்சாகமான பதில் முன்னேற்றத்தில் உள்ள நம்பிக்கையின் சக்திவாய்ந்த அடையாளமாகும்.
ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அவர்களுடைய பெற்றோர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுதல் என்பது வாழ்க்கையில் வெற்றியை மதிப்பிடுவதற்கு மக்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான அளவுகோல்களில் ஒன்றாகும்.
இந்த அளவீட்டின் மூலம், இளைஞர்கள் அவர்களின் தலைமுறையின் வாய்ப்புகளைப் பற்றி நன்றாக உணர்கிறார்கள்…
… ஆனால் அவ்வளவு வேகமாக இல்லை!
இளைஞர்களிடையே முன்னேறும் இந்த நம்பிக்கை பெரும்பாலான வளமான நாடுகளில் இல்லை
இன்றைய குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களைவிட சிறந்த நிலைக்கு எதிராக பொருளாதாரத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று இளைஞர்கள் கூறுவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம்.
வளமான நாடுகளில் உள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கு வளங்களும் வாய்ப்புகளும் உள்ளன அவைகளால் வளரும் நாடுகளில் உள்ள இளைஞர்கள் பொறாமைப்படுகிறார்கள்
எனினும் அவர்கள் அவர்களின் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, வளமான நாடுகளில் உள்ள இளைஞர்கள் பொருளாதார அமைதியின்மையால் பெரும் சுமையுடன் இருக்கிறார்கள்.

நிச்சயமற்ற எதிர்காலத்தில் இளைஞர்களின் பொருளாதார வாய்ப்புகளைப் எப்படி மேம்படுத்துவது?

இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளவும்

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்ற இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.

நம்பிக்கைஉலகளாவிய கண்ணோட்டம்