UNICEF | for every childUNICEF | for every child

தகவல்

ஸ்க்ரோலிங் நம்புவதா?

வயதானவர்களைவிட இளைஞர்கள் சமூக ஊடக தளங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் அவற்றை எவ்வளவு நம்புகிறார்கள்?

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக நாங்கள் 21 நாடுகள் முழுவதும் 15–24 மற்றும் 40+ வயதுடையவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தினோம்.

ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்
சராசரியாக, துல்லியமான தகவலை வழங்குவதற்கு எந்த வீதத்தில் இளைஞர்கள் சமூக ஊடக தளங்களை "அதிகம்" நம்புவதாகக் கூறுகிறார்கள்?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்

சமூக ஊடக தளங்கள் இளைஞர்கள் அவர்களுக்கான தகவல்களைப் பெறுவதற்கான மிகவும் பொதுவான வழியாகும். அவர்கள் ஸ்க்ரோலிங் செய்வதை அவர்கள் நம்புகிறார்கள் என்று அர்த்தமல்ல.

% இளைஞர்கள் அதிகம் நம்புகிறார்கள்
சமூக ஊடக தளங்கள்
17%

சராசரியாக, இளைஞர்களில் 17% அவர்கள் சமூக ஊடக தளங்கள்மூலம் வரும் தகவல்களை "அதிகம்" நம்புவதாகக் கூறுகிறார்கள்.

இது பாரம்பரிய தேசிய ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் விஞ்ஞானிகள் ஆகியவற்றை அதிகம் நம்புபவர்களை விடக் குறைவான பங்காகும் - நாங்கள் கேட்ட ஒவ்வொரு ஆதாரத்திலும்!

இளைஞர்கள் அவர்கள் படிக்கும் அனைத்தும் உண்மையல்ல என்பதை உணர்ந்தாலும், அவர்கள் பொதுவாகப் பல்வேறு தகவல் மற்றும் நிறுவனங்களில் வயதானவர்களை விட அதிக நம்பிக்கையைத் தெரிவிக்கிறார்கள்.

வயதானவர்களைவிட இளைஞர்கள் குறிப்பிடத் தக்க அளவில் குறைந்த நம்பிக்கையை தெரிவிக்கும் ஒரே ஒரு விஷயம் உள்ளது:

மதம் சார்ந்த நிறுவனங்கள்

முரணாக, இளைஞர்கள் வயதானவர்களை விடப் பின்வரும் தகவல் ஆதாரங்களில் குறிப்பிடத் தக்க உயர்ந்த அளவிலான நம்பிக்கையை அறிவிக்கிறார்கள்:

சமூக ஊடக தளங்கள்

தேசிய அரசாங்கம்

சர்வதேச செய்தி ஊடகம்

விஞ்ஞானிகள்

இளைஞர்கள் சராசரியாக வயதானவர்களைவிட சமூக ஊடகங்களில் சற்று அதிக நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள், இந்தக் கதையில் ஒரு திருப்பம் உள்ளது:

அவர்களின் தகவல்களுக்காகச் சமூக ஊடகங்களை நம்பியிருக்கும் மக்கள் மத்தியில், வயதான பயனர்களுடன் ஒப்பிடுகையில் இளைஞர்கள் சமூக ஊடக தளங்களில் அதிக நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதாக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் 24% குறைவு.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான இளம் நெட்டிசன்கள் அவர்கள் ஆன்லைனில் படிப்பதை கருத்துணரக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

நீங்கள் கேள்விப்படும்தகவல்களை நீங்கள் எவ்வளவு நம்புகிறீர்கள்?

இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளவும்

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்ற இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.

தகவல்கள்ஆதாரங்களுக்குச் செல்லவும்