UNICEF | for every childUNICEF | for every child

காலநிலை மாற்றம்

மற்றொரு காலநிலை நெருக்கடி

காலநிலை மாற்றம் மனிதகுலத்திற்கு இணையற்ற சோதனையை முன்வைக்கிறது. இளம் தலைமுறையினர் மீது சுமை விகிதாசாரமின்றி விழும். இளைஞர்கள் சவாலை எவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள்?

UNICEF + Gallup 55 நாடுகளில் உள்ள இளைஞர்கள் + முதியவர்கள் இன்று உலகை எப்படி அனுபவிக்கிறார்கள் என்று கேட்டனர்.

ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்
முதலில் நாங்கள் பருவநிலை மாற்றம்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று 15-24 வயதுடைய இளைஞர்களிடம் கேட்டோம். எத்தனை பேர் ஆம் என்று பதிலளித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்
சராசரியாக, 85% இளைஞர்கள் காலநிலை மாற்றம்பற்றிக் கேள்விப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
காலநிலை மாற்றத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட இளைஞர்களிடம் இரண்டு விருப்பத்தேர்வுகளுக்கு இடையில் சரியான வரையறையை அடையாளம் காணும்படி நாங்கள் கேட்டோம்.

சராசரியாக எந்தப் பங்கு சரியானது என்று நினைக்கிறீர்கள்?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்
சராசரியாக, 50% பேர் மட்டுமே காலநிலை மாற்றத்தின் சரியான வரையறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்: மனித நடவடிக்கைகளின் விளைவாகச் சராசரி உலக வெப்பநிலை அதிகரித்து அதிக தீவிரமான வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
மீதமுள்ளவர்கள் காலநிலை மாற்றம் வெப்பநிலையில் பருவநிலை மாற்றங்களைக் குறிக்கிறது என்று நினைக்கிறார்கள்.
% இளைஞர்கள் காலவநிலை மாற்றத்தைப் புரிந்துகொள்கிறார்கள்
குறைந்த வருமானமுள்ள நாடுகள்
47%
குறைந்த-நடுத்தர வருமானமுள்ள நாடுகள்
44%
மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடுகள்
52%
உயர்-வருமானமுள்ள நாடுகள்
82%
உலகளாவிய இளைஞர்களிடையே காலநிலை மாற்றம்பற்றிய புரிதல் முழுமையாக இல்லை. என்பது தெளிவாகிறது
இது குறிப்பாக ஏழை நாடுகளில் உண்மையாக உள்ளது - நெருக்கடிக்கு மிகவும் குறைந்த அளவிலேயே பங்களித்துள்ளது - இன்னும் அதிகமாக வெளிப்படுகிறது.
சராசரியாக, உயர் வருமானமுள்ள நாடுகளில் உள்ள இளைஞர்களில் 82% பேர் காலநிலை மாற்றத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதாகவும் சரியான வரையறையை அடையாளம் காண முடிவதாகவும் கூறுகிறார்கள்.
குறைந்த வருமானமுள்ள நாடுகளில் பங்கு சராசரியாக 47% மட்டுமே
நல்ல செய்தி என்னவென்றால், ~15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று அதிகமான மக்கள் காலநிலை மாற்றம்குறித்து உலகளவில் அறிந்திருக்கிறார்கள்.
2008-இல் இது வெறும் 56% மக்களாக இருந்தது.
இன்று, ஏறத்தாழ 80% மக்கள் காலநிலை மாற்றம்பற்றி அறிந்திருக்கிறார்கள்.
அதே காலகட்டத்தில் அனைத்து வயதினருக்கும் இடையே காலநிலைப் பற்றிப் புரிந்து கொள்வதில் மிதமான வளர்ச்சி உள்ளது.
ஆனால் உலகளாவிய காலநிலை அறிவு தேவைப்படுவதை விட மிகக் குறைவாக உள்ளது. காலநிலை நெருக்கடியைப் புரிந்து கொள்ளத் தவறுவது அதை எதிர்த்துச் செயல்படுவதற்கான நமது திறனைத் தடுக்கிறது.
காலநிலை கல்வி மாற்றத்திற்கான கோரிக்கையை வலுப்படுத்த உதவும்.

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம்குறித்து விழிப்புணர்வை மேம்படுத்த என்ன செய்யலாம்?

இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளவும்

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்ற இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.

காலநிலை மாற்றம்காலநிலை நடவடிக்கை