UNICEF | for every childUNICEF | for every child

ஏஜென்சி

குழந்தை சக்தி

பெரும்பாலான குழந்தைகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆனால் அவர்கள் அவர்களின் கருத்துக்களை வேறு வழிகளில் வெளிப்படுத்தலாம். யார் கேட்கிறார்கள்?

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக நாங்கள் 21 நாடுகள் முழுவதும் 15–24 மற்றும் 40+ வயதுடையவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தினோம்.

ஆய்வுபற்றி மேலும் படிக்கவும்
அரசியல்வாதிகள் முடிவெடுக்கும்போது குழந்தைகளின் கருத்துக்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

குழந்தைப் பருவத்தின் மாறும் தன்மைபற்றி மேலும் அறிந்து கொள்ள மேலுள்ள கேள்விக்குப் பதிலளிக்கவும்

கேள்விக்குத் திரும்பவும்

சராசரியாக, பெரும்பாலான இளைஞர்கள் குழந்தைகளின் கருத்துக்களைக் கேட்பது மிகவும் முக்கியம் என்று நம்புகிறார்கள்.

அதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் வயதானவர்களும் அவர்களுடன் உடன்படுகிறார்கள்!

அரசியல் தலைவர்கள் முடிவெடுக்கும்போது குழந்தைகளின் கருத்துக்களைக் கேட்பது முக்கியம் என்று 40+ வயதுக்கும் மேற்பட்டவர்களில் % பேர் நினைக்கிறார்கள்
உயர்வான வருமானமுள்ள நாடுகள்
47%
உயர்-நடுத்தர வருமானமுள்ள நாடுகள்
67%
குறைந்த/குறைந்த-நடுத்தர வருமானமுள்ள நாடுகள்
60%

வளர்ந்து வரும் நாடுகளில் குழந்தைகளின் கருத்துக்களைக் கேட்கும் அரசியல் தலைவர்களுக்கு ஆதரவைத் வெளிப்படுத்தும் பெரும்பான்மை உள்ளது.

குறிப்பாக மக்கள்தொகையில் பெரிய பங்காக குழந்தைகள் இருக்கும் வளரும் நாடுகளில் குழந்தைகளின் கருத்துக்களைக் கேட்பது நல்ல உணர்வு.

குறைவான மற்றும் குறைந்த-நடுத்தர வருமானமுள்ள நாடுகளில், மக்கள்தொகையில் 48% குழந்தைகள் தான். சராசரியாக, வயாதனவர்களில் 60%பேர் இந்த நாடுகளில் குழந்தைகளின் கருத்துக்களைக் கேட்பது மிகவும் முக்கியம் என்று கூறுகிறார்கள்.

முரணாக, உயர்வான வருமானமுள்ள நாடுகளில், மக்கள்தொகையில் 20% மட்டுமே குழந்தைகள். சராசரியாக, இந்த நாடுகளில் உள்ள வயதானவர்களில் 47%பேர் அரசியல்வாதிகள் குழந்தைகளின் கருத்துக்களைக் கேட்பது மிகவும் முக்கியம் என்று கூறுகிறார்கள்.

40 வயதுக்கு மேற்பட்டவர்களில் % பேர் அரசியல்வாதிகள் முடிவெடுக்கும்போது குழந்தைகளின் கருத்துக்களைக் கேட்பது மிகவும் முக்கியம் என்று கூறுகிறார்கள்.100%
பங்களாதேஷ்30%நைஜீரியா94%
0%

வயதானவர்கள் மத்தியில், நைஜீரியாவில்... குழந்தைகளின் கருத்துக்களைக் கேட்கும் அரசியல்வாதிகளுக்கு அதிக ஆதரவு இருப்பதைப் பார்க்கிறோம்.

…மற்றும் ஜிம்பாப்வே. இந்த இரண்டு நாடுகளிலும், பாதி மக்கள்தொகை குழந்தைகள் தான்.

இளைஞர்களின் கருத்துக்களில் அதிக கவனம் செலுத்த அரசியல்வாதிகளை நாம் எப்படி ஊக்குவிக்கலாம்?

இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளவும்

குழந்தைப்பருவம் எப்படி மாறுகிறது என்ற இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்.

ஏஜென்சிதடை இல்லாமல் இளைஞராக இருக்கலாம்